உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குறுகலான சாலையால் அவதி வாகனங்கள் செல்வதில் சிக்கல்

குறுகலான சாலையால் அவதி வாகனங்கள் செல்வதில் சிக்கல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனத்தில் இருந்து குண்ணவாக்கம், காப்புக்காடு வழியே, சாலவாக்கம் செல்லும் சாலை உள்ளது. நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலையை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர் உத்திரமேரூர், செங்கல்பட்டு, சாலவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.இந்நிலையில், சேதமடைந்த இச்சாலை, சில மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது. அப்போது, இருபுறமும் உள்ள சாலையோர பள்ளங்களில் மண் கொட்டாமல் விடப்பட்டுள்ளது. இதனால், குறுகலாக உள்ள இந்த சாலையில், எதிரெதிரே செல்லும் வாகனங்கள், ஒதுங்கி செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும், அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும்போது, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.இந்த சாலையை இரு வாகனங்கள் செல்லும் அளவுக்கு விரிவுப்படுத்த, வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, திருப்புலிவனம் -- - சாலவாக்கம் சாலையை, இரு வாகனங்கள் செல்லும் அளவுக்கு விரிவுபடுத்த, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை