வேணுகோபால சுவாமிக்கு திருக்கல்யாண உத்சவம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கம்மவார்பாளையம் கிராமத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் ராம நவமியை முன்னிட்டு, பத்து நாள் உத்சவம் நடைபெறுவது வழக்கம்.நடப்பாண்டு, ஏப்., 6ம் தேதி ராம நவமி அன்று, முதல் நாள் உத்சவம் துவங்கியது. தினசரி, வேணுகோபாலசுவாமி மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.பத்தாவது நாளான நேற்று முன்தினம், வேணுகோபால சுவாமிக்கு திருக்கல்யாண உத்சவம் நடந்தது. இந்த கல்யாண உத்சவத்தை முன்னிட்டு, இரவு 10:00 மணிக்கு திருமண சீர்வரிசை புறப்பாடு மற்றும் திருக்கல்யாணம் உத்சவ வைபவத்தில், சிவாச்சாரியர்கள் மாங்கல்யத்தை அணிவித்து, திருமணம் செய்து வைத்தனர். நேற்று, பட்டாபிஷேக விழா நடந்தது.