உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி விஜய் கிரிக்கெட் கிளப் அணி வெற்றி

காஞ்சி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி விஜய் கிரிக்கெட் கிளப் அணி வெற்றி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த பிரீமியர் லீக் சீசன் 7, கிரிக்கெட் போட்டியில், காஞ்சி விஜய் கிரிக்கெட் கிளப் அணியினர் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி, காஞ்சிபுரத்தில், கமல், பரணி நினைவு 'காஞ்சி பிரீமியர் லீக் சீசன் 7' கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இறுதி போட்டியில், காஞ்சி விஜய் கிரிக்கெட் கிளப் அணியும், காஞ்சி பி.ஆர்.சி.சி., அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த, காஞ்சி பி.ஆர்.சி.சி., அணியினர், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 17.3 வது ஓவரில், அனைத்து விக்கெட்டு களையும் இழந்து 85 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய, காஞ்சி விஜய் கிரிக்கெட் கிளப் அணியினர், 7.2 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு, 86 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். காஞ்சி விஜய் கிரிக்கெட் கிளப் அணியில், பிரகாஷ் ஆலி, 20 பந்துகளில், 4 பவுண்டரி, 6 சிக்ஸர் என, மொத்தம் 53 ரன்கள் எடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ