உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நீர்த்தேக்க தொட்டி கட்டியும் பயனில்லை வில்லிவலம் கிராம வாசிகள் புலம்பல்

நீர்த்தேக்க தொட்டி கட்டியும் பயனில்லை வில்லிவலம் கிராம வாசிகள் புலம்பல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த வில்லிவலம் ஊராட்சியில், 2020 - 21ம் நிதியாண்டில் 15வது நிதிக்குழு மானியத்தில், 14.60 லட்சம் ரூபாய் செலவில், 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்ட துவக்கத்திலேயே லேசாக தண்ணீர் கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, ஒப்பந்ததாரர் தரமில்லாமல் கட்டியுள்ளார் என, கிராம வாசிகள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகள், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, பெயின்ட் அடிக்கும் பணி மட்டுமே செய்தனர். இந்த பணியும் தரம் இல்லாததால், மீண்டும் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. இதை கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் கண்டுகொள்வதில்லை என, கிராமவாசிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, வில்லிவலம் கிராமத்தினர் கூறியதாவது: பொதுவாக, ஒரு கட்டடத்தை புதுப்பிக்கும் போது, உள்ளேயும், வெளியேயும் பெயின்ட் அடிப்பது வழக்கம். அதேபோல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் வெளியே மட்டும் பெயின்ட் அடித்துள்ளனர்.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு உள்ளே பெயின்ட் அடிக்கவில்லை. மேலும், தண்ணீர் கசிவு நிறுத்தவும் வழிவகை செய்யவில்லை. பல லட்சம் ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக மாறியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை