உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டாஸ்மாக் கடை மூட உத்தரவு விஷ்ணு நகர் வாசிகள் நிம்மதி

டாஸ்மாக் கடை மூட உத்தரவு விஷ்ணு நகர் வாசிகள் நிம்மதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் மேட்டுத்தெரு, நெல்லுக்கார தெரு உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபான கடைகள் அப்பகுதியினருக்கு தொந்தரவாக இருந்து வந்தது.சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் அடிக்கடி ஏற்பட்டதால், கடந்தாண்டு இந்த இரு டாஸ்மாக் கடைகளும் மூடபட்டன. இந்நிலையில், ராஜாஜி மார்க்கெட் அருகே செயல்பட்ட டாஸ்மாக் கடையும், அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு தொந்தரவாக இருந்ததால், சமீபத்தில் அக்கடையை மூடி கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார்.இந்நிலையில், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் தேனம்பாக்கம் அருகே, விஷ்ணு நகரில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை, அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு தொந்தரவாக இருந்தது.இது தொடர்பாக, குடியிருப்போர் நல சங்கத்தினர், கலெக்டரிடம் தொடர்ந்து மனு அளித்து வந்த நிலையில், விஷ்ணு நகர் டாஸ்மாக் கடையை மூடி, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். இதனால், அப்பகுதியினர் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி