உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாகரலில் வீணாகும் குடிநீர்

மாகரலில் வீணாகும் குடிநீர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து, ஓரிக்கை வழியாக, உத்திரமேரூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், தினசரி, நுாற்றுக்கணக்கான பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.காஞ்சிபுரம் - உத்திரமேரூர் இடையே களக்காட்டூர், ஆர்ப்பாக்கம், மாகரல், வெங்கச்சேரி, மணல்மேடு, திருப்புலிவனம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தேவைக்கு, காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய பகுதிக்கு சென்று வருகின்றனர்.இதில், மாகரல் கிராமத்தில், குடிநீர் குழாய் உடைப்பெடுத்து தண்ணீர் வீணாக சென்று கால்வாய் வழியாக வயலில் கலக்கிறது. இதை தடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தினசரி பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது.எனவே, மாகரல் கிராமத்தில் வீணாகி வரும் குடிநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !