உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  வல்லக்கோட்டை முருகன் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் விமரிசை

 வல்லக்கோட்டை முருகன் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் விமரிசை

ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவத்தையொட்டி மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், நேற்று திருக்கல்யாண உத்சவம் நடந்தது. காலை 9:00 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடந்து, உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் மயில் மண்டபத்திற்கு எழுந்தருளினர். காலை 10;00 மணிக்கு திருக்கல்யாண உத்சவம் தொடங்கியது. திருக்கல்யாணத்தை தலைமை அர்ச்சகர் சந்திரசேகர குருக்கள் நடத்தி வைத்தார். திருக்கல்யாண உத்சவத்தை முன்னிட்டு, மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மலர்மாலை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி