உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வட்டம்பாக்கம் ஊராட்சியில் ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவி

வட்டம்பாக்கம் ஊராட்சியில் ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவி

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், மக்கள் தொடர்பு திட்ட முகாம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.இதில், பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு பவரும் திட்டங்களின் விபரங்களை துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.முகாமை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், தகுதி பெற்ற 196 பயனாளிகளுக்கு, 1.57 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.தொடர்ந்து, ஒரகடம் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நடைப்பெற்ற, 'அப்பார்ட்மென்ட் பஜார்' கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.இதில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த கைவினை, கைத்தறி, பாரம்பரிய சிறுதானிய உணவு, பனை ஓலை பொருட்கள், மரச்செக்கு எண்ணெய், சணல் பைகள் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஸ்ரீபெரும்புதுார் சார் - ஆட்சியர் நமிருணாளினி, குன்றத்துார் ஒன்றிய சேர்மன் சரஸ்வதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை