மேலும் செய்திகள்
நல வாரியம் மூலம் ரூ.16.24 கோடி உதவி
10-Apr-2025
வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் சேர அழைப்பு
14-Apr-2025
காஞ்சிபுரம்:தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ், 20 அமைப்பு சாதா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வாரியங்களில் பதிவு பெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஈமச்சடங்கு, விபத்து ஊனம், கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டும் பணியிடத்து விபத்து மரணம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் வேலை மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல் சட்டம் 1982ல் உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 114 தொழில் இனங்களில் ஈடுபட்டுள்ள 18 வயது நிறைவு செய்து, 60 வயதிற்கு உட்பட்டவராக உள்ள தொழிலாளர்கள் உரிய வாரியத்தில் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.தொழிலாளர்கள் தங்கள் உறுப்பினர் பதிவனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில், தற்போது வரை 76,150 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.கடந்த நிதியாண்டில் காஞ்சிபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகம் வாயிலாக 10,493 பயனாளிகளுக்கு, 3 கோடியே 99 லட்சத்து 67,700 ரூபாய் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டுள்ளது.மேலும், 4,937 ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக மாதந்தோறும் 1,200 ரூபாய் வீதம், 6 கோடியே 25 லட்சத்து 15,600 ரூபாய் என, மொத்தம் 15,880 பயனாளிகளுக்கு 10 கோடியே 24 லட்சத்து 83,300 ரூபாய் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் சமூக பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் லிங்கேஸ்வரன் கூறியதாவது:வெளிமாநில கட்டுமான தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கே சென்று, 336 வெளிமாநில கட்டுமான தொழிலாளர்களை நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய வாரந்தோறும் புதன்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இணையம் சார்ந்த தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கே சென்று பதிவு செய்து வருகிறோம்.பதிவு பெற்ற பெண், திருநங்கை ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆட்டோ ரிக் ஷா வாங்கும் செலவீனத்தில் 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பதிவு பெற்ற சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக 300 சதுர அடிக்கு குறையாமல் நிலம் வைத்திருந்தால், அவர்ககள் வீடு கட்ட 4 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.சொந்தமாக நிலம் இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஓதுக்கீடு பெற 4 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.பதிவு பெற்ற, பதிவு பெறாத கட்டுமான தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்து மரணம் ஏற்பட்டால், இறந்த கட்டுமான தொழிலாளியின் நியமனதாரர்களுக்கு 5 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் பயனடைலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
நலத்திட்ட உதவி பெற்ற தொழிலாளர்கள்நலத்திட்டம் பயனாளி தொகைகல்வி 9,710 2.00 கோடிதிருமணம் 231 39.02 லட்சம்மகப்பேறு 1 3,000.00கண் கண்ணாடி 2 1,500.00இயற்கை மரணம் 98 42.47 லட்சம்விபத்து மரணம் 3 5.12 லட்சம்புதிய ஓய்வூதியம் 893 1.07 கோடிமாதாந்திர ஓய்வூதியம் 4,937 6.25 கோடிஆட்டோ மானியம் 5 5.00 லட்சம்மொத்தம் 15,880 10.24 கோடி
10-Apr-2025
14-Apr-2025