உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தாமல் மேம்பாலம் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

 தாமல் மேம்பாலம் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

காஞ்சிபுரம்: திறக்கப்பட்ட சில நாட்களில் மூடப்பட்ட தாமல் மேம்பாலத்தை, பயன்பாட்டுக்கு கொண்டு வர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். சென்னை - பெங்களூரு இடையே, தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை செல்கிறது. இச்சாலை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகின்றன. காஞ்சிபுரம் காரப்பேட்டை முதல், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., துார விரிவு படுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளன. இதில், ஆரியபெரும்பாக்கம், திருப்புட்குழி, தாமல் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளன. கீழம்பி, ஆரியபெரும்பாக்கம் ஆகிய மேம்பாலங்களை, வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். தாமல் மேம்பாலம் வாகன பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட சில நாட்களில், பேரல் வைத்து பாதை அடைக்கப்பட்டு உள்ளது. இதனால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள், சர்வீஸ் சாலையை பயன்படுத்த வேண்டி உள்ளது. எனவே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தாமல் மேம்பாலத்தை வாகன பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சோதனை ஓட்டத்திற்கு மேம்பாலம் திறக்கப்பட்டு இருந்தது. 'மேம்பாலத்தின் உறுதி தன்மை அறிக்கை அரசிற்கு அனுப்பி உள்ளோம். வாகன பயன்பாட்டிற்கு திறக்கலாம் என, ஒப்புதல் கிடைத்ததும் திறந்துவிடுவோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி