/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி புகார் பெட்டி கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம் மாற்றப்படுமா?
காஞ்சி புகார் பெட்டி கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம் மாற்றப்படுமா?
காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமத்தில் இருந்து, வெம்பாக்கம் செல்லும் சாலை, காமராஜர் தெருவில், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றம் தெரு மின்விளக்கிற்காக சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், ஒரு மின்கம்பத்தில், கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளன. வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் செல்லும் கனரக வாகனம் லேசாக மின்கம்பத்தில் உரசினாலோ, பலத்த காற்றுடன் மழை பெய்தாலோ மின்கம்பம் உடைந்து விழுந்தால் மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, சிதிலமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க, மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.குமார்,வெம்பாக்கம்.