உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மண் திட்டுகளால் துார்ந்த வடிகால்வாய் சீரமைக்கப்படுமா?

மண் திட்டுகளால் துார்ந்த வடிகால்வாய் சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாயார் குளம் சாலையில், மண் திட்டுகளால் துார்ந்த மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.காஞ்சிபுரம் தாயார் குளம் சாலையில், அப்பகுதியில், மழைநீர் வெளியேறும் வகையில் சாலையோரம் கான்கிரீட் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், மூன்று அடி ஆழமுள்ள கான்கிரீட் கால்வாயில் இரண்டரை அடி ஆழத்திற்கு மண் திட்டுகளால் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், மழை பெய்யும்போது, கால்வாய் மூலம் வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள கடைகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே, தென்மேற்கு பருவமழை தீவிர மடைவதற்குள் தாயார் குளம் தெருவில் மண் திட்டுகளால் துார்ந்த மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி