உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்

108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்

ஸ்ரீபெரும்புதுார் : ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனாராம், 37, இவரது மனைவி புதனி, 35. இருவரும், ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஆரநேரி கிராமத்தில் தங்கி, தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.நிறைய மாத கர்ப்பிணியான புதனிக்கு, நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனே, '108' அவசரகால ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, புதனியை ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது, வழியிலேயே பிரசவ வலி அதிகரித்ததால், அவசர மருத்துவ உதவியாளர் மணிகண்டன் பிரசவம் பார்த்தார்.ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது. பின், தாயும், குழந்தையும் ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை