உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மகளிருக்கான கபடி போட்டி

மகளிருக்கான கபடி போட்டி

வாலாஜாபாத்; வாலாஜாபாத் பேரூராட்சி, தி.மு.க., மகளிர் அணி சார்பில், ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மகளிருக்கான மாநில அளவிலான ஒரு நாள் கபடி போட்டி நேற்று நடந்தது.வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த இப்போட்டியில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 15 மகளிர் கபடி அணியினர் மோதினர்.வாலாஜாபாத் தி.மு.க., பேரூராட்சி செயலர் பாண்டியன் மற்றும் மகளிர் அணி அமைப்பாளர் எல்லம்மாள் முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் ஆகியோர் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.போட்டியில் பங்கேற்ற 15 அணிகளில், காஞ்சிபுரம் எஸ்.டி.ஏ.டி., அணி முதல் இடம் பெற்றது.அந்த அணிக்கு, 10,000 ரூபாய் ரொக்க பரிசாக வழங்கப்பட்டது. 2ம் இடம் பெற்ற காஞ்சிபுரம் அணிக்கு, 7,000 ரூபாயும், 3ம் இடம் பிடித்த கல்பாக்கம் பெண்கள் கபடி அணிக்கு, 5,000 ரூபாயும், 4ம் இடம் பிடித்த பண்ருட்டி அணிக்கு, 3,000 ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.மேலும், வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் கோப்பை மற்றும் மெடல் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பங்கேற்ற அனைத்து அணியினருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை