உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூரில் 10க்கு 9 ஆசிரியர் பயிற்றுனர் இடங்கள் காலியால் பணிகள் பாதிப்பு

உத்திரமேரூரில் 10க்கு 9 ஆசிரியர் பயிற்றுனர் இடங்கள் காலியால் பணிகள் பாதிப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுனர் இடங்கள் 10க்கு ஒன்பது காலியாக இருப்பதால், பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வட்டார வள மையம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் கீழ், 123 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இந்த அலுவலகத்தின் மூலம் கல்வித் துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அணுகுமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.மேலும், பள்ளிகளை மேற்பார்வை செய்து ஆலோசனை வழங்கி, அனைவருக்கும் கல்வி திட்ட செயல்பாடுகளை ஒன்றிய அளவில் செயல் படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், உத்திரமேரூர் வட்டார வள மையத்தில் 11 பணியிடங்கள் உள்ளன. அவற்றில், ஒரு மேற்பார்வையாளர் மற்றும் 10 ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் அடங்கும்.தற்போது மேற்பார்வையாளர், ஒரு ஆசிரியர் பயிற்றுனர் என இரண்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள ஒன்பது ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இதனால், வட்டார வள மைய அலுவலகத்தில் பதிவேடுகள் பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சியும் முழுமையாக அளிக்க முடியவில்லை.மேலும், பள்ளி செல்லா குழந்தைகளை மீட்கும் பணிகளும் மந்த நிலையில் உள்ளன. எனவே, உத்திரமேரூர் வட்டார வள மையத்தில், ஆசிரியர் பயிற்றுனர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உத்திரமேரூர் வட்டார வள மையத்தில் ஒன்பது ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் குறித்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.விரைவில் காலி பணியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை