உடைந்த செய்யாற்று கரை பலப்படுத்தும் பணி மும்முரம்
உத்திரமேரூர்:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்ட, பெஞ்சல் புயலால் சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி, ஜவ்வாது மலை ஆகிய பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், பலத்த மழை பெய்தது.இதனால், உத்திரமேரூர் தாலுகா, வெங்கச்சேரி செய்யாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கருவேப்பம்பூண்டி மடம் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு செய்யாற்று கரையில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளநீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.தகவலறிந்த, வருவாய் மற்றும் நீர்வளத்துறையினர், பொக்லைன் வாயிலாக உடைந்த கரையை மீண்டும் பலப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். கரையை பலப்படுத்தும் பணியை உத்திரமேரூர் தி.மு.க.- ,-எம்.எல்.ஏ.,- சுந்தர் ஆய்வு செய்தார். வருவாய் ஆய்வாளர் வினோத்குமார், கிராம நிர்வாக அலுவலர் சரிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.