உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊரக வளர்ச்சி துறையினருக்கு விலக்கு அளிக்க பணி மேற்பார்வையாளர்கள் சங்கத்தினர் மனு

ஊரக வளர்ச்சி துறையினருக்கு விலக்கு அளிக்க பணி மேற்பார்வையாளர்கள் சங்கத்தினர் மனு

மதுரமங்கலம், மதுரமங்கலம் அடுத்த, செல்லம்பட்டிடை ஊராட்சியில், எலுமியான்கோட்டூர் துணை கிராமம் உள்ளது. இங்கு, 41 பழங்குடியினருக்கு, பாரத பிரதமர் திட்டத்தில், தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டு உள்ளன.ஒவ்வொரு வீட்டிற்கும், தலா, 2 லட்சம் ரூபாய் மத்திய அரசின் பங்களிப்பு நிதி. மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 26,460 ரூபாய். மாநில அரசின் பங்களிப்பு நிதி 2 லட்சத்து 80,540 ரூபாய் என மொத்தம், 5 லட்சத்து 7,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இந்த நிதியை வீடு கட்ட தேர்வு செய்த பயனாளிகளின் வங்கி கணக்கில், ஐந்து கட்டங்களாக விடுவிக்கப்படும். இந்த வீடுகளை, அந்தந்த பயனாளிகளே கட்டிக் கொள்ளலாம். இல்லை எனில், உதவுவோரின் வாயிலாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.எலுமியான்கோட்டூர் கிராமத்தில், பழங்குடியினருக்கு, பாரத பிரதமர் திட்டத்தின் வாயிலாக கட்டிக் கொடுக்கப்படுகிறது. வீடு கட்டுவோர், செங்கலுக்கு பதிலாக, 'ஹாலோ பிளாக்' கல்லில் கட்டி வருகிறார்.இதில், தரமில்லை என, கிராம மக்கள் சிலர் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குநர் ஆர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் கவிதா உள்ளிட்ட பல்வேறு நிலை ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இருப்பினும், ஊரக வளர்ச்சி துறையினரை வஞ்சிக்கப்படுவதாக அத்துறை அதிகாரிகள் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சிமென்ட் கலவை, கல் உறுதி தன்மை அனைத்தும் பரிசோதனை உட்படுத்தி உள்ளோம். அனைத்து முடிவுகளும் சரியான முறையில் இருக்கிறது என, ஆய்வறிக்கை வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

விலக்கு அளிக்கணும்

இருளர்களுக்கான வீடு கட்டும் பணி மற்றும் பழங்குடியினருக்கு, பாரத பிரதமர் திட்டப் பணிகளுக்கு, ஊரக வளர்ச்சி துறையில் போதிய பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், பணி சுமையும் அதிகரித்துள்ளது. ஆகையால், இரு திட்டங்களில் இருந்து, ஊரக வளர்ச்சி துறையினருக்கு விலக்கு அளிக்க வேண்டும்.பணி மேற்பார்வையாளர் சங்கம்,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை