உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உலக இதய தின கருத்தரங்கம்

உலக இதய தின கருத்தரங்கம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பாக உலக இதய தினத்தையொட்டி, மருத்துவர்களுக்கான தொடர் மருத்துவ கருத்தரங்கம், விருது பெற்ற மருத்துவர்களுக்குப் பாராட்டு விழாவும், நடப்பு ஆண்டு எம்.பி.பி.எஸ்., பயில தேர்வாகியுள்ள மாணவர்களுக்குப் பாராட்டு விழா நேற்று நடந்தது.இதில், வரவேற்புரையாற்றிய காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன் பேசியதாவது:ஆண்டுதோறும், இதய நோயால் இந்தியாவில் ஏழு லட்சம் பேர் இறக்கின்றனர். தொற்றா நோய்களான மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் ஆகிய நோய்களால் ஏற்படும் உயிரிழப்பை வரும் 2025ம் ஆண்டில், 25 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உலக இதய மருத்துவர்கள் ஒன்று கூடி திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.இந்திய மருத்துவ சங்க பொது மருத்துவர்கள் கல்லுாரியில் பால்வினை நோய்கள் குறித்த பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்ற துணைத் தலைவர் டாக்டர் ரவி, சென்னையில் நடந்த மெடிஸ்பைக் விளையாட்டு போட்டிகளில், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் விளையாடி வெற்றிபெற்ற 13 டாக்டர்களும், நடப்பு ஆண்டு எம்.பி.பி.எஸ்., பயில உள்ள மருத்துவ துறையை சார்ந்த பிள்ளைகளும் கவரவிக்கப்பட்டனர்.காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிலைய முதுநிலை உதவிப் பேராசிரியர் டாக்டர் விவேகானந்தன் 'சமூகத்தால் ஏற்படும் நிமோனியா காய்ச்சல்' என்ற தலைப்பில் கருத்தரங்க உரையாற்றினார்.இணை செயலர் டாக்டர் வெ.முத்துகுமரன் தொகுத்து வழங்கினார். பொருளாளர் பேராசிரியர் டாக்டர் ஞானகணேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை