உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், சுகாதாரத் துறை சார்பில், உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர், அரசு அலுவலர்கள் எடுத்து கொண்டனர். தொடர்ந்து உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை, கலெக்டர் கலைச்செல்வி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் மருத்துவ செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர், செவிலியர் கல்லுாரி மாணவியர் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ - மாணவியர் என, 200 பேர் பங்கேற்றனர். பேரணி நிகழ்ச்சியில், தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஹிலாரினா ஜோசிட்டா நளினி, துணை இயக்குநர் கல்பனா, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் தாரா, மாவட்ட குடும்ப நல செயலக ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.