உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / யோகீஸ்வர மகரிஷி ஜெயந்தி விழா

யோகீஸ்வர மகரிஷி ஜெயந்தி விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சுக்லயஜூர் வேத சாஸ்திர பாடசாலையில், யோகீஸ்வர மகரிஷியின் 116வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. பெரிய காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் சுக்லயஜூர் வேத சாஸ்திர பாடசாலை உள்ளது. இங்கு யோகீஸ்வர மகரிஷியின் 116வது ஜெயந்தி விழாவையொட்டி நவசண்டி மஹா ஹோமம், வேத பாட சாலையில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நேற்று நடந்தது. காளஹஸ்தி சுதாகர் சர்மா தலைமையில் நவசண்டி மஹா ஹோமம் நடந்தது. தொடர்ந்து, யோகீஸ்வர மகரிஷிக்கு சிறப்பு தீபாராதனையும், பாடசாலையில் வேதத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா பாட சாலை அறக்கட்டளை தலைவர் கணபதி தலைமையில் நடந்தது. செயலர் குமார், பொருளாளர் வேணுகோபாலன், நிர்வாகி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தனஞ்சய கணபாடிகள் வரவேற்றார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரகாஷ் பட்டப்படிப்பு முடித்த ஆறு பேருக்கு பட்டம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ