மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை: வாலிபர் கைது
07-Jan-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் குயில்தோப்பு என்ற இடத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான இருந்த ஒருவரிடம் விசாரித்தனர்.காஞ்சிபுரம் சாத்தான்குட்டை தெருவைச் சேர்ந்த தனுஷ்கோடி, 23, என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 15,000 ரூபாய் மதிப்பிலான, 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
07-Jan-2025