உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முன்னால் சென்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

முன்னால் சென்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

ஸ்ரீபெரும்புதுார்:திருவண்ணாமலை மாவட்டம், கிடாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், 23; ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லம் பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, ‛ஹமஹா ஆர்15' பைக்கில், ஒரகடத்தில் இருந்து, வல்லம் பகுதிக்கு சென்றார். ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், மாத்துார் அருகே, ஒரகடம் துணை மின் நிலைய சந்திப்பில், முன்னால் சென்ற லாரி வலது புறம் திருப்பியது. அப்போது, குணசேகரவின் பைக், கட்டுபாட்டை இழந்து, லாரியின் பின்னால் மோதியது.இதில், தலையில் பலத்த காயமடைந்த குணசேகரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரகடம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை