உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / லாரி - பைக் மோதல் வாலிபர் உயிரிழப்பு

லாரி - பைக் மோதல் வாலிபர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதுார்:விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்பர் அலி, 30. ‛ஹீரோ பேஷன் புரோ' இருசக்கர வாகனத்தில், நேற்று காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் சென்றார்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் அருகே, முன்னால் சென்ற லாரி இடதுபுறம் திரும்பிய போது, அக்பர் அலியின் இருசக்கரம் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்னால் மோதியது.இதில், தலையில் பலத்த காயமடைந்தவரை, அவ்வழியாக வந்த வானக ஓட்டிகள் மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்ததில் அக்பர் அலி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை