மேலும் செய்திகள்
படிக்கட்டிலிருந்து விழுந்த முதியவர் உயிரிழப்பு
10-Oct-2025
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இறைச்சி கடையில், மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார். காஞ்சிபுரம், ஓரிக்கை பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் ரபீக் மகன் அல்தாப், 20. இவர், ஓரிக்கையில் உள்ள சிக்கன் இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல, நேற்று பணிக்கு சென்ற அவர், காலை 7:30 மணியளவில், கோழியை சுத்தம் செய்யும் மிஷினை பயன்படுத்தியபோது திடீரென மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, காஞ்சி புரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது சம்பந்தமாக, அவரது தந்தை ரபிக் அளித்த புகாரையடுத்து, காஞ்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
10-Oct-2025