உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டூ - வீலர் திருடிய வாலிபருக்கு காப்பு

டூ - வீலர் திருடிய வாலிபருக்கு காப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த விஷார் கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன், 56. இவர், காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில், காஞ்சிபுரம் பணிமனையில் நேர காப்பாளராக பணியாற்றி வருகிறார்.கடந்த 10ம் தேதி காலை 10:00 மணிக்கு, காஞ்சிபுரம் பேருந்து நிலையம், சிவன் கோவில் அருகே, இருசக்கர வாகனத்தை நிறுத்தி பணிக்கு சென்றார். வழக்கம்போல், மாலை பணி முடித்து இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது, இருசக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.இதுகுறித்து, சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, எலத்துார் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், 30, என்பவர் திருடியது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !