உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கீழம்பி கிராமத்தில், கஞ்சா விற்ற, இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, பாலுச் செட்டிச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கீழம்பி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்ததாக இரு வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, கூரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபுதேவா, 35, மற்றும் சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், 27, என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த, 2900 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !