மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
மர்ம காய்ச்சல் பாதித்து மருத்துவ மாணவி பலி
19-Sep-2025
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வியன்னுார் பேயோட்டுவிளையை சேர்ந்த மோகன்தாஸ், 60, பெட்ரோல் பங்க் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்கிறார். உடல் நலக்குறைவால் அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு மகள்கள் சென்னையில் மருத்துவம் படிக்கின்றனர். இளையமகள் அக்ஷயா, 23, கல்லுாரி விடுமுறையால் வீட்டுக்கு வந்திருந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள் இருவர், மோகன்தாசை தாக்கி, மகள் அக் ஷயாவை மிரட்டி பீரோவில் இருந்த 200 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினர்.கொள்ளையர்களிடம், 3 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கவில்லை. செல்லோடேப்பில் சுற்றி வைத்திருந்ததால் கொள்ளையர்கள் அதை கவனிக்காமல் விட்டு சென்றனர். மோகன்தாஸ் மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வீட்டில் பெயின்டிங் வேலைக்காக ஏணி வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் வழியாக கொள்ளையர்கள் ஏறி வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடத்தில் ஈடுபடுத்தப்பட்டது. திருவட்டார் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
24-Sep-2025 | 1
20-Sep-2025
19-Sep-2025