மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
மர்ம காய்ச்சல் பாதித்து மருத்துவ மாணவி பலி
19-Sep-2025
நாகர்கோவில்:கன்னியாகுமரி அருகே ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு, கட்டப்பஞ்சாயத்து நடத்தி, 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும், 60 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. தொடர்ந்து, அவரை போலீசிடம் ஒப்படைக்காமல் ஊர் நிர்வாக கமிட்டி என்ற பெயரில் சிலர் ஒரு அறையில் துாணில் கட்டி வைத்து விடிய விடிய கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர்.முதியவரின் வீட்டை ஆறு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து, அதில் 3 லட்சத்தை சிறுமியிடம் குடும்பத்துக்கு அபராதமாக வழங்கி, முதியவரும் தங்களுக்கு கமிஷன் தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.சட்டத்தை கையில் எடுத்து கட்டப்பஞ்சாயத்து செய்து, சிறுமிக்கு அநீதி விளைவித்தவர்கள் மீதும், முதியவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட சிறுபான்மையினர் நல கூட்டமைப்பு பொதுச்செயலர் மீரான் மைதீன், கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யிடம் புகார் செய்துள்ளார்.
24-Sep-2025 | 1
20-Sep-2025
19-Sep-2025