உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / மதுக்கடையை அகற்ற கோரி காங்., கட்சியினர் தர்ணா

மதுக்கடையை அகற்ற கோரி காங்., கட்சியினர் தர்ணா

நாகர்கோவில் : தமிழகம் - கேரள எல்லையான களியக்காவிளை கோழிவிளையில் சோதனை சாவடி அருகே, பாருடன் செயல்படும் டாஸ்மாக் கடை காரணமாக அந்த பகுதியினர் பல இடையூறுகளை சந்திக்கின்றனர். இந்த பகுதியில் இரு மாநில மது பிரியர்களும் மது குடிக்க வருவதால், அந்த பகுதியில் வாகனங்களை நிறுத்து வதாலும், சோதனை சாவடி செயல்படுவதாலும், பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இந்த கடையை அகற்ற பொதுமக்கள், காங்., கட்சியினர் இரு ஆண்டு களுக்கும் மேலாக பலவித போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தியபோது 20 நாட்களில் கடை அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.ஆனால், இதுவரை கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, காங்., சட்டசபை குழு தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் காங்., கட்சியினர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில், குளச்சல் எம்.எல்.ஏ., பிரின்ஸ், விளவங்கோடு எம்.எல்.ஏ., தாரகை கத்பர்ட் உட்பட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், காங்., கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.ஆளும் தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூன்று எம்.எல்.ஏ.,க்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ