உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / குமரி கடலில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்

குமரி கடலில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்

நாகர்கோவில்:கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல பூம்புகார் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்குகிறது. ஆனால் திருவள்ளுவர் சிலை அருகே அலையின் தாக்கம் அதிகம் இருக்கும் காலங்களில் அங்கு படகுகள் செல்வதில்லை. பயணிகள் விவேகானந்தர் பாறையில் நின்றபடி திருவள்ளுவர் சிலையை கண்டு திரும்புவர்.இரண்டு பாறைகளையும் இணைக்க ரூ.37 கோடியில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக கடலில் 27 அடி உயரத்தில் தூண்கள் நிறுவப்படுகிறது. புதுச்சேரியில் இணைப்பு பாலத்திற்கான கூண்டு ஸ்டீன்லெஸ் கம்பிகள் வடிவமைத்து தயாரிக்கப்படுகிறது.இக்கூண்டின் எடை 222 டன். 101 பாகங்களாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. கூண்டில் தற்போது வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருவதாகவும் இது முடிந்தவுடன் கன்னியாகுமரிக்கு கொண்டுவரப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கூண்டு ஆர்ச்சை தூக்கி வைத்து இணைக்க திருவள்ளுவர் சிலையில் பெரிய கிரேன் நிறுவப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் கூண்டுகள் இங்கு கொண்டுவரப்பட்டு இணைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ