மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
மர்ம காய்ச்சல் பாதித்து மருத்துவ மாணவி பலி
19-Sep-2025
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில், சில நாட்களாக சீரான இடைவெளி விட்டு மழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை, மலையோர பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால், பேச்சிப்பாறை அணையில் இருந்து, வினாடிக்கு, 1,925 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணையில் இருந்து, வினாடிக்கு 510 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக கோதையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கோதையாறு வெள்ளப்பெருக்கு காரணமாக மோதிரமலை குற்றியாறு தரை பாலத்தை தண்ணீர் மூழ்கடித்தது.இங்கு புதிய பாலம் கட்டுவதற்கு பணிகள் தொடங்கிய நிலையில், தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த தற்காலிக பாலத்தை காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்றது. நேற்றும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
24-Sep-2025 | 1
20-Sep-2025
19-Sep-2025