உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / 150 ரூபாய்க்காக கொலை; போதை ஆசாமிகள் வெறி

150 ரூபாய்க்காக கொலை; போதை ஆசாமிகள் வெறி

நாகர்கோவில் : நாகர்கோவிலில் மளிகை கடைக்காரரை, 150 ரூபாய் பணத்திற்காக கொலை செய்து எரித்துக் கொன்ற போதை ஆசாமிகளால் பரபரப்பு ஏற்பட்டது.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் வேலு, 42; பாரதி நகர் பகுதியில் மளிகை கடை நடத்தினார். திருமணமாகவில்லை. கடந்த 7ம் தேதி இரவு கடையை பூட்டி வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த இவரை, சிலர் கல்லால் அடித்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தனர்.இது தொடர்பாக, ஆரல்வாய்மொழி, திருமலாபுரத்தை சேர்ந்த சுதன், 26, என்பவரை போலீசார் கைது செய்தனர். கடையை பூட்டி திரும்பிய வேலுவிடம், சுதன், அவரது நண்பர் சேர்ந்து மதுகுடிக்க பணம் கேட்டுள்ளனர். அவர், இல்லை என்று கூறியதால், ஆத்திரமடைந்த அவர்கள், வேலுவை தாக்கி, அவரது பாக்கெட்டில் இருந்து 150 ரூபாயை எடுத்தனர்.போலீசாரிடம் காட்டிக் கொடுத்து விடுவார் என்று பயந்து, தலையில் தாக்கியுள்ளனர். வேலு கீழே விழுந்து இறந்ததும், பெட்ரோல் ஊற்றி உடலை தீ வைத்து எரித்துள்ளனர். தப்பிய சுதனின் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி