மேலும் செய்திகள்
எடையை குறைக்க 'டயட்' மயங்கி விழுந்து பெண் பலி
03-Aug-2024
நாகர்கோவில்:கன்னியாகுமரி அருகே மனைவி இறந்த துக்கத்தில் அவரது கல்லறையில் விஷம் குடித்து கணவர் தற்கொலை செய்து கொண்டார்.கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே மூங்கில்விளை கல்படியை சேர்ந்தவர் டென்னிஸ் டேனியல் 63. கூலி தொழிலாளி. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி உடல் நல குறைவால் இறந்துவிட்டார். அவரது உடலை வீட்டின் பின்பகுதியில் அடக்கம் செய்தார். அன்று முதல் மன வருத்தத்தில் இருந்த டென்னிஸ் டேனியல் நேற்று முன்தினம் மனைவியின் கல்லறை அருகே மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. மணவாளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Aug-2024