உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / போதைப் பொருளுடன் கேரள டிரைவர் கைது

போதைப் பொருளுடன் கேரள டிரைவர் கைது

நாகர்கோவில்:இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருளுடன் கேரள லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.மெத்தாம்பெட்டமைன் என்ற வெளிநாட்டு போதைப்பொருள் லேசாக நுகர்ந்தாலே மணிக்கணக்கில் போதை தரக்கூடிய வீரியம் கொண்டது. இந்தியாவில் இதன் பயன்பாட்டுக்கு தடை உள்ளது. நாகர்கோவில் ஒழுகினசேரியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட கோட்டார் போலீசார், அவ்வழியாக சென்ற லாரியை சோதனை செய்தனர். லாரி டிரைவரிடமிருந்து இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.விசாரணையில், அவர் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், எருமேலியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என, தெரிந்தது. பெங்களூரில் அறிமுகம் இல்லாத நபரிடமிருந்து போதைப் பொருளை வாங்கியதாக அவர் கூறியுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் எடை, மதிப்பு குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ