மேலும் செய்திகள்
மண்ணெண்ணெய் குண்டு வீசிய வாலிபர் மீது 'குண்டாஸ்'
16-Feb-2025
நாகர்கோவில்,: நாகர்கோவிலில் மளிகை கடைக்காரரை எரித்துக் கொலை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் வேலு 42. பாரதி நகர் பகுதியில் மளிகை கடை நடத்தினார். திருமணமாகவில்லை. மார்ச் 7 தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த இவரை சிலர் கல்லால் அடித்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொலை செய்தனர்.இது தொடர்பாக மூன்று தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியில் வந்த கஞ்சா கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி திருமலாபுரத்தை சேர்ந்த சுதன் 26, என்பவரை போலீசார் கைது செய்தனர். கொலை நடந்தது எப்படி
கடையை பூட்டிவிட்டு திரும்பிய வேலுவிடம், சுதன் மற்றும் மற்றொரு நண்பர் சேர்ந்து மதுகுடிக்க பணம் கேட்டுள்ளனர். அவர் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அவர்கள் வேலுவை தாக்கிவிட்டு அவரது பாக்கெட்டில் இருந்து 150 ரூபாயை மட்டும் எடுத்தனர். பின்னர் உயிரோடு விட்டால் இவர் நம்மை காட்டிக் கொடுத்து விடுவார் என்று பயந்து தலையில் தாக்கியுள்ளனர்.இதில் வேலு கீழே விழுந்து இறந்ததும் அவரது பாக்கெட்டில் இருந்து எடுத்த 150 ரூபாயில் 50 ரூபாய்க்கு மட்டும் பெட்ரோல் வாங்கி உடலை தீ வைத்து எரித்துள்ளனர். சுதன் நண்பரை தேடும் போலீசார் சுதன் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர்.
16-Feb-2025