உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / மகள் மீது பாலியல் தாக்குதல்; போக்சோவில் தந்தை கைது

மகள் மீது பாலியல் தாக்குதல்; போக்சோவில் தந்தை கைது

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே மகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய தந்தையை போக்சோவில் போலீசார் கைது செய்து எட்டு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.மண்டைக்காடு அருகே உள்ள ஒரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 42 வயதானவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர். மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மே 2 இவரது மனைவி தன் சகோதரி வீட்டுக்கு சென்றார். வீட்டில் தனியாக சிறுமி இருந்த நிலையில் தந்தையே அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார். அதையடுத்து மே 9, 18ல் மீண்டும் அவர் பாலியல் தாக்குதல் நடத்த முயன்ற போது மனைவி திடீரென வீட்டுக்கு வந்தார். அவர் கணவரின் செய்கையை கண்டு அதிர்ச்சியுற்றார்.பின் மகளுடன் குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பத்மாவதி போக்சோ உள்ளிட்ட எட்டு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்தவரை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ