மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
நாகர்கோவில்:கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மீது ஆரல்வாய்மொழியில் கல் வீசப்பட்டது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) போலீசார் விசாரணையை துவக்கினர்.இந்த ரயில் ஜூன் 16 மாலை 6:45 மணிக்கு ஆரல்வாய்மொழியை கடந்து சென்ற போது சிலர் ரயில் மீது கல் வீசினர். பெண் பயணி ஒருவர் காயமுற்றார். அவருக்கு மதுரை ரயில்வே ஸ்டேஷனில் முதலுதவி அளிக்கப்பட்டது.திருநெல்வேலி, கோவில்பட்டி, விருது நகர் ரயில்வே ஸ்டேஷன்களில் முதலுதவி அளிக்க வசதி இல்லை என மதுரை வரை காயமுற்றவரை அழைத்தது சென்றது விவாதமானது.ரயில் மீது கல் வீசியது தொடர்பாக ஆர்.பி.எப்., அதிகாரிகள் நேற்று காலை ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினரிடம் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.கன்னியாகுமரி ரயில் இப்பகுதியை கடந்து செல்லும் முன் கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. இதில் முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணித்த இரண்டு பேர் மோதிய பின் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில் நின்றதும் கீழே இறங்கிய இரண்டு பேரும் மீண்டும் மோதிக் கொண்டனர்.ரயில்வே கார்டு மற்றும் லோகோ பைலட் ஓடி வருவதை கண்டதும் ஒருவர் தப்பி விட்டார். மற்றொருவரை பயணிகள் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பிய நபர் அப்பகுதியில் பதுங்கி இருந்து கன்னியாகுமரி ரயில் மீது கல்வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
24-Sep-2025 | 1
20-Sep-2025