உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயற்சித்தவர் கைது

மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயற்சித்தவர் கைது

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே ஹெலன்நகர் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவர் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி பிரின்ஸ் 30. மீன்பிடித் தொழில் செய்கிறார். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு ஆண்டனி பிரின்ஸ் மூதாட்டியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து துாங்கிக் கொண்டிருந்த அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். மூதாட்டி சத்தமிட்டார். ஆத்திரமடைந்த ஆன்டனி பிரின்ஸ் அவரை தாக்கினார்.இதில் மூதாட்டி காயமடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புதுக்கடை போலீசார் ஆண்டனி பிரின்ஸை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ