மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
மர்ம காய்ச்சல் பாதித்து மருத்துவ மாணவி பலி
19-Sep-2025
திருவட்டார்:திருவட்டார் அருகே சுவாமியார்மடம் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பிரேமகுமாரி. இவரது மகள் அஸ்வதி, 22. பிரேமகுமாரியின் கணவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். மகள் அஸ்வதி, வியன்னுார் அருகேயுள்ள தனியார் கல்லுாரியில் நர்சிங் படித்து வந்தார்.அப்போது வியன்னுார் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் பெற்றோருக்கு தெரியாமல், கடந்த 19ம் தேதி கோவிலில் திருமணம் செய்து, அவரவர் வீடுகளில் வசித்து வந்தனர்.இந்த தகவல், தாய் பிரேமகுமாரிக்கு தெரிந்தது. இதனால் தாய், மகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பிரேமகுமாரி, அஸ்வதியை வேலைக்கு செல்ல விடாமல் வீட்டில் பூட்டி வைத்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் பிரேமகுமாரி வீட்டில் இல்லாதபோது தப்பித்து வெளியே வந்த அஸ்வதி, திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரேமகுமாரியை ஸ்டேஷனுக்கு வரவழைத்து பேசினர். பின் அஸ்வதியையும், ராஜேஷையும் சேர்த்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
24-Sep-2025 | 1
20-Sep-2025
19-Sep-2025