உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / குமரியில் இன்று கள்ளக்கடல் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

குமரியில் இன்று கள்ளக்கடல் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாகர்கோவில்:கன்னியாகுமரியில் இன்று கள்ளக்கடல் எனப்படும் கடல் சீற்றம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 60 கி.மீ., துாரமுள்ள கடற்பகுதியில் இன்று மதியம், 2:30 முதல் இரவு, 11:30 மணி வரை, 0.9 மீட்டர் முதல் 1.00 மீட்டர் வரை கடல் அலைகள் உயரும்; கடல் கொந்தளிப்பாக காணப்பட வாய்ப்புள்ளதாக, இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது.கடற்கரை பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலாளர்களும், கடற்கரை பகுதியில் வசிப்பவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், கடல் கொந்தளிப்பு காணப்படும் என்பதால் சிறிய படகுகள் செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. சுற்றுலா பயணியர் கடற்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.சில மாதங்களுக்கு முன் கள்ளக்கடல் எச்சரிக்கையை மீறி ராஜாத்தமங்கலம் அருகே லெமூரியா கடற்கரைக்கு சென்ற மூன்று பயிற்சி டாக்டர்கள் அலையில் சிக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ