மேலும் செய்திகள்
கோவில் பொக்கிஷங்கள் திருட்டு ஹிந்து முன்னணி கவலை
19-Dec-2024
வீரபாண்டி, முறைகேடுகளை தவிர்க்க, கோவில்களில் நடக்கும் திருமணங்களுக்கு மணமக்கள் பெற்றோர்களுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் இணைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், திருமணம் செய்ய முகூர்த்த தினத்துக்கு ஒரு மாதத்துக்கு முன், இ.சேவை மையத்தில் திருமணத்துக்கான சான்றுகளை அளித்து முதல் திருமண சான்றிதல் பெற வேண்டும். இதை வைத்து சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று, விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் மணமக்களின் பள்ளிப்படிப்பு சான்று, டி.சி., ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், ஜாதி சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாட்சி கையெழுத்து போடுபவரின் ஆதார் அட்டை நகல்கள் மற்றும் திருமண பத்திரிகை இணைத்து, முகூர்த்த தினத்துக்கு மூன்று நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட கோவிலில் கொடுத்து, கட்டணத்தை செலுத்தினால் திருமணம் செய்து வைக்கப்படும். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களில், மேற்கண்ட ஆவணங்களுடன் மணமக்கள் இருவரின் பெற்றோர்களுடன் இருக்கும் குடும்ப புகைப்படத்தையும் இணைக்க வேண்டும் என, அறிவிப்பு செய்துள்ளனர். இது குறித்து அறநிலையத்துறை அலுவலர்கள் கூறுகை யில்,' மணமக்களின் குடும்ப பின்னணி குறித்து விசாரிக்க முடிவதில்லை. இதனால் பல முறைகேடுகள் நடக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, பெற்றோர்களுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் வேண்டும் என, அதிகாரிகள் வாய் மொழியாக அறிவுறுத்தியுள்ளதால், அதன்படி அறிவிப்பு செய்துள்ளோம்,' என்றனர்.
19-Dec-2024