உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / அலைபேசியில் சவால் விட்டு காதலி வீடு சென்ற காதலனுக்கு தர்ம அடி

அலைபேசியில் சவால் விட்டு காதலி வீடு சென்ற காதலனுக்கு தர்ம அடி

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே காதலியின் சகோதரனிடம் விட்ட சவாலை நிறைவேற்ற காதலி வீடு சென்ற காதலனுக்கு தர்ம அடி விழுந்தது.அருமனை அருகே பள்ளிக்கூடம் பகுதியைச் சேர்ந்தவர் சிஜூ. நாகர்கோவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரும் அப்பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் ஐந்தாண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலி குடும்பத்தில் எதிர்ப்பு இருந்தது. பின் சில கட்டுப்பாடுகளுடன் சிஜூவுக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க காதலியின் பெற்றோர் சம்மதித்தனர்.ஆனால் அதை பொருட்படுத்தாமல் சிஜூ எல்லை மீறி நடந்ததால் இரு தரப்பினரிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. காதலியின் சகோதரன் ஜென்சியிடம் அலைபேசியில் பேசி சிஜூ தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமுற்ற ஜென்சி தைரியம் இருந்தால் எங்கள் ஏரியாவுக்கு வந்து பார் என சவால் விடுத்தார். அதை ஏற்று சிஜூ காதலி வீட்டுக்கே சென்றார். அவரை ஜென்சி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயமுற்ற சிஜூ ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிஜூ புகாரின் பேரில் ஜென்சி மீது அருமனை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஜென்சி தலைமறைவாகி விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ