உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி அசாம் வாலிபர் சுற்றிவளைப்பு

ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி அசாம் வாலிபர் சுற்றிவளைப்பு

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பீச் சந்திப்பில், தனியார் வங்கி ஏ.டி.எம்., அறைக்குள் நேற்று முன்தினம் இரவு சென்ற வாலிபர் ஒருவர், பணம் எடுக்காமல் நீண்ட நேரம் நின்று விட்டு, வெளியே வந்து கம்பி போன்ற பொருட்களுடன் மீண்டும் உள்ளே சென்றார்.இதைப்பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், குளச்சல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்தபோது வாலிபர் தப்பி ஓடினார். ஐஸ் கம்பெனிக்குள் மறைந்திருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், பிடிபட்டவர்அசாம் மாநிலம், நரயன் புர்நல்பரி பகுதியைச் சேர்ந்த சம்சுல் அலி, 22, என்பது தெரிய வந்தது. நான்கு நாட்களுக்கு முன், சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு வேலைக்கு வந்துள்ளார். அங்கு, உறவினரிடம் சண்டை போட்டுவிட்டு, அதிக பணம் சம்பாதிப்பதற்காக, ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்க திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை