உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / இன்ஜினியரிங் மாணவர் மீது தாக்குதல் வழக்கறிஞர் உட்பட 2 பேர் மீது வழக்கு

இன்ஜினியரிங் மாணவர் மீது தாக்குதல் வழக்கறிஞர் உட்பட 2 பேர் மீது வழக்கு

நாகர்கோவில்:மார்த்தாண்டத்தில் பெட்ரோல் பங்க் அருகே சிகரெட் புகைத்ததை தட்டி கேட்ட இன்ஜினியரிங் மாணவரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர் உட்பட இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மார்த்தாண்டம் வடக்கு தெரு கல் பொற்றைவிளையை சேர்ந்தவர் அபினேஷ் 22. இன்ஜினியரிங் கல்லுாரியில் நான்காம் ஆண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் இவர், தம்பி ராகுலுடன் விரிகோடு பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தார்.அங்கு வந்த இருவர் சிகரெட் புகைத்துள்ளனர். அதுகுறித்து அபினேஷ் கேட்டபோது இருவரும் அவரை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.விசாரணையில் அவரை தாக்கியவர்கள் விரிகோட்டை சேர்ந்த ஆகாஷ் 22, சிவச்சந்திரன் போஸ் 27, என்பது தெரிய வந்தது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சிவசந்திரன் போஸ் குழித்துறையில் வழக்கறிஞராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ