மேலும் செய்திகள்
மகளை பலாத்காரம் செய்த காமுக தந்தைக்கு 'கம்பி'
03-Jun-2025
நாகர்கோவில்:மகளைப் பார்க்க வந்த தந்தையை தாக்கியதாக தாய் உட்பட நான்கு பெண்கள் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தேனம்பாறை செக்கிட்டாவிளையை சேர்ந்தவர் ஜெகன் 35. ஆட்டோ டிரைவர் . இவரது மனைவி ஜாஸ்பின் 25. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்தனர். ஜாஸ்பின் மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.சம்பவத்தன்று ஜெகன் மகளை பார்ப்பதற்காக மனைவி வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த ஜாஸ்மின் மற்றும் உறவினர்களான மெர்லின் 35, ஐஸ்வர்யா 23, விமலா சாந்தி மேரி 50 ஆகியோர் சேர்ந்து ஜெகனை தடுத்ததோடு தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர்.காயமடைந்த ஜெகன் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் ஜாஸ்பின் உள்ளிட்ட நால்வர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
03-Jun-2025