உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / வேன் கவிழ்ந்து சென்னை பக்தர் உயிரிழப்பு

வேன் கவிழ்ந்து சென்னை பக்தர் உயிரிழப்பு

நாகர்கோவில்: கேரள மாநிலம், சபரிமலையில் தரிசனம் முடித்த பின், நிலக்கல்லில் இருந்து பக்தர்களுடன் சென்னைக்கு சென்ற வேன் நேற்று மாலை துலாப்பள்ளி ஆலபாட்டுகவலை என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து இரு வாகனங்கள் மீது மோதி கவிழ்ந்தது.இதில், சென்னையைச் சேர்ந்த சிவகுமார், 65, சம்பவ இடத்திலேயே இறந்தார். இவர், அகில பாரத அய்யப்பா சேவா சங்க தமிழ்நாடு மாநில கவுன்சில் உறுப்பினராக இருந்தார். வேனில் பயணித்த எட்டு பேர் படுகாயம் அடைந்து, பத்தனம்திட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ