உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி /  சென்னை பெண் பலாத்காரம் குமரி ஆட்டோ டிரைவர் கைது

 சென்னை பெண் பலாத்காரம் குமரி ஆட்டோ டிரைவர் கைது

நாகர்கோவில்: காதலித்த போது வீடியோ காலில் பேசி சென்னை காதலியை ஆடையை அவிழ்க்க செய்து படம் எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்ததாக கன்னியாகுமரி ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே செட்டிவிளையைச் சேர்ந்தவர் லிபின் ராஜ் 27. குலசேகரத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். சென்னை இளம் பெண் ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமானார். இருவரும் நீண்ட நேரம் அலைபேசியில் பேசி வந்தனர். பின் வீடியோ காலில் பேசும் போது காதலியிடம் ஆடைகளை அவிழ்க்கும்படி கூறியுள்ளார். பிறகு அதை படம் எடுத்து வைத்து விட்டு சென்னை சென்றார். அங்கு தான் தங்கிய அறைக்கு பெண்ணை வரவழைத்து பலாத்காரம் செய்தார். பிறகு அந்த பெண் வர மறுத்த போது அவர் ஆடை இல்லாமல் வீடியோ காலில் பேசிய படத்தை அவரது தாயாருக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து லிபின்ராஜ் மீது சென்னை வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அருமனை வந்து லிபின் ராஜை கைது செய்து அழைத்து சென்றனர். இவர் குலசேகரம் பகுதியில் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிய வந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ