மேலும் செய்திகள்
காவிரி கரையோர பட்டா நிலங்களில் நுாதன மணல் கொள்ளை
29-Aug-2024
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில், மத்திய அரசின் அபூர்வ மணல் ஆலை செயல்படுகிறது. ஆலையில் இல்மனைட், ருட்டைஸ், சிர்கன், கார்னெட், சில்மனைட் உள்ளிட்ட அபூர்வ தாது பொருட்கள் பிரித்து எடுக்கப்படுகின்றன. மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சலில் மணலை முழுமையாக எடுத்து தாதுக்கள் பிரிக்கப்பட்டதால், தற்போது அப்பகுதியில் உள்ள மணலில், தாதுக்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் ஆலையை மூடும் அபாயம் ஏற்பட்டதால், கிள்ளியூர் பகுதி யில், 2,826 ஏக்கரில் அணு கனிம சுரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இங்கிருந்து எடுக்கப்படும் மணல் அளவுக்கு அதேளவு மணல் திரும்பி கொட்டப்படும் என, ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.எனினும் பொதுமக்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆலை கதிர்வீச்சால் மணவாளக்குறிச்சி பகுதியில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், கிள்ளியூர் பகுதியில் இப்பாதிப்பு ஏற்படும் என்பதால், பங்கு தந்தையர், பொதுமக்கள் துவக்க கட்டத்திலேயே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில், மணவாளக்குறிச்சி மணல் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கடலோர கிராம பெண்கள், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
29-Aug-2024