உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / மண்டையில் கல்லை போட்டு மருமகனை கொன்ற மாமனார்

மண்டையில் கல்லை போட்டு மருமகனை கொன்ற மாமனார்

நாகர்கோவில்:கோபித்துக் கொண்டு தந்தை வீட்டிற்கு சென்ற காதல் மனைவியை அழைக்க சென்ற போது, மாமனார் கல்லை துாக்கி போட்டதில் மருமகன் இறந்தார். கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளத்தை சேர்ந்தவர் சிபின், 25; கூலித்தொழிலாளி. அஞ்சு கிராமம் அருகே மயிலாடி, காமராஜர் நகரை சேர்ந்தவர் சகாய நிஷா, 23. இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது. சகாய நிஷா கணவரிடம் கோபித்துக் கொண்டு, மயிலாடியிலுள்ள தந்தை ஞானசேகர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், 17ம் தேதி, மாமனார் வீட்டுக்கு சென்ற சிபின், மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அப்போது, ஞானசேகருக்கும், சிபினுக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில், ஞானசேகரன் சிமென்ட் கல்லை துாக்கி மருமகன் மண்டையில் போட்டார். இதில், மண்டை உடைந்து, ஆசாரிப்ப ள்ளம் மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சிபின் இறந்தார். ஞானசேகர் மீது அஞ்சு கிராமம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை