மேலும் செய்திகள்
ரூ.52 லட்சம் மோசடி கேரள வாலிபர் கைது
07-Dec-2024
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த இன்ஜினியர் மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த டாக்டரிடம், 56 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது. இரண்டு வழக்குகள் குறித்தும் நாகர்கோவில் 'சைபர் கிரைம்' போலீசார் விசாரணை நடத்தினர்.அதில் மும்பையைச் சேர்ந்த கும்பல் இவர்களை ஏமாற்றியது தெரிந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சொர்ணராணி தலைமையிலான தனிப்படை போலீசார் மும்பை சென்று அம்மாநில போலீசின் உதவியுடன் ரம்ஜான் மஸ்ரூத் ஷேக், 28, உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து நாகர்கோவில் அழைத்து வந்தனர்.இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களது கூட்டாளிகள் ராஜஸ்தான், கோவா மாநிலங்களில் இருப்பது தெரிந்தது. இவர்களையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
07-Dec-2024